/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்தால்வாழி அம்மனுக்கு விளக்கு பூஜை
/
முத்தால்வாழி அம்மனுக்கு விளக்கு பூஜை
ADDED : ஆக 04, 2025 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : முத்தால்வாழி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம், ராகவன்பேட்டை, முத்தால்வாழி அம்மன் கோவிலில், ஆடி மாத சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் பாலாபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடந்தது.
காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு பாலபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பால் குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.