/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிலம், மனை முகவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
/
நிலம், மனை முகவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜன 08, 2024 05:13 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நிலம், மனை முகவர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். பொருளாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். உப தலைவர் ரவி, இணைச் செயலாளர் சண்முகசுந்தரேசன், துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், முருகன், இணைச் செயலாளர் தேவதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வீட்டுமனைகளை பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்ய போகும்போது, பட்டா எடுத்துவரக்கோரி வலியுறுத்துவதை கைவிட வேண்டும். நிலத்தின் மதிப்பீட்டுத் தொகையை அதிகரித்து, பத்திரப்பதிவினை தேவையின்றி கால தாமதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.