ADDED : ஜன 10, 2026 05:57 AM

அ நிறம் | அளவு
மயிலம்: மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லுாரியில் விலையில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜிகுமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் கல்லுாரி கல்வித்துறை வேலுார் மண்டல இணை இயக்குநர் மலர் பேசினார்.
நிகழ்ச்சியில் 254 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா லேப்டாப்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை கல்லுாரி உதவி பேராசிரியர் வள்ளி தொகுத்து வழங்கினார். துறை தலைவர்கள் உதவி பேராசிரியர் உட்பட பலர் பங்கேற்றனர்.
