/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உழவரை தேடி திட்டம் ஆலம்பூண்டியில் துவக்க விழா
/
உழவரை தேடி திட்டம் ஆலம்பூண்டியில் துவக்க விழா
ADDED : மே 29, 2025 11:23 PM

செஞ்சி: ஆலம்பூண்டியில் உழவரை தேடி திட்டம் துவக்க விழா நடந்தது.
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உழவரை தேடி என்ற புதிய திட்டத்தை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி, வரிக்கல் கிராமங்களில் இதற்கான துவக்க விழா நடந்தது.ஆலம்பூண்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், கேமல், ஊராட்சி தலைவர் முத்தம்மாள் சேகர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை அலுவலர் செந்தில் நாதன் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கால்கடை உதவி மருத்துவர் சந்தோஷ், பட்டு வளர்ச்சித்துறை இளநிலை அலுவலர் ஜெயலட்சுமி, தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் நடராஜ், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் முத்துகுமரன் ஆகியோர் திட்டம் குறித்து பேசினர்.
இதில் வேளாண்மை உதவி அலுவலர்கள் காந்திமதி, சுப்பிரியா, திருநாவுக்கரசு, சுதாகர், உதவி விதை அலுவலர் குமார், உதவிதொழில் நுட்ப மேலாளர் ஜெயகணேஷ், கவிதா, ஊராட்சி செயலாளர் மேனகா, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குண்டு ரெட்டியார், வெங்கடேன் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் கலந்து கொண்டனர்.