/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சட்டக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
/
சட்டக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 01, 2024 05:32 AM

விழுப்புரம்: விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரசு சட்ட கல்லூரிகளில் 100 இடங்களில் சட்டக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மூலம் பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம்கள் நேற்று நடந்தது.
இதன்படி விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் விழுப்புரத்தில் 4 இடங்களில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதன் ஒரு நிகழ்வாக விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் இருந்து, சட்ட கல்லூரி மாணவர்கள் சார்பில் சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தொடங்கி வைத்தார். சார்பு நீதிபதி ஜெயப்பிரகாஷ், அரசு சட்ட கல்லூரி முதல்வர் கிருஷ்ணாலீலா, வழக்கறிஞர்கள் சந்திரமவுலி, பரீதாஞானமணி, ஜெயஜோதி முன்னிலை வகித்தனர்.
சட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த பேரணி திருச்சி சாலை, புதிய பஸ் நிலையம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று, மீண்டும் சட்ட கல்லூரியில் நிறைவடை ந்தது.
உதவி பேராசிரியர் சவிதா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.