/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழக்கறிஞர் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
/
வழக்கறிஞர் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 18, 2024 03:36 AM

விழுப்புரம் :  விழுப்புரத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர், சி.ஏ.ஏ., சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கோர்ட் வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பிரகாஷ், சரவணன், சசிகுமார், சம்சுதீன், குருநாதன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, சங்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய பா.ஜ., அரசு, நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கொண்டுவந்துள்ள, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் பேசினர்.