/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ-பைலிங் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மறியல்
/
இ-பைலிங் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மறியல்
இ-பைலிங் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மறியல்
இ-பைலிங் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மறியல்
ADDED : டிச 18, 2025 05:46 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர், நீதிமன்றங்களில் இ-பைலிங் என்ற புதிய மின்னணு பதிவு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராடி வருகின்றனர்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு நேற்று காலை 10:30 மணிக்கு வழங்கறிஞர்கள் சங்கத்தினர், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர்கள் சகாதேவன், ராஜகுரு, பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் காளிதாஸ், தமிழ்செல்வன், சங்கரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
தமிழக நீதிமன்றங்களில் இ-பைலிங் திட்டத்தை செயல்படுத்த கணினி கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், உரிய பணியாளர்களை நியமிக்கும் இ-பைலிங் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். பின் திருச்சி நெடுஞ்சாலையில் அமர்ந்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார், வழக்கறிஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர்.
வானுார் நீதிமன்ற வளாகம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வானுார் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். இதில் வழக்கறிஞர்கள் அய்யனார், ராமச்சந்திரன், வீரப்பன், ஜேம்ஸ், சதீஷ், வேல் முருகன், மாதவன், சக்தி, ஜெயக்குமார், ஷர்மா, சரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

