/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பொறியியல் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு பொறியியல் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பொறியியல் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பொறியியல் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 20, 2024 05:05 AM
விழுப்புரம் : விழுப்புரம் அண்ணா பல்கலைக் கழக அரசு பொறியியல் கல்லுாரியில், தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி கலையரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேராசிரியர் சரஸ்வதி வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கி பேசினார்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் சார்பு நீதிபதி ஜெயச்சந்திரன், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கான சிறப்பு சட்டங்கள். பொது மக்களுக்கு சட்டம் சார்ந்த உதவிகள், போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்.
போதை பொருள் பயன்படுத்துவர்களுக்கு வழங் கப்படும் தண்டனை குறித்தும் விளக்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பேராசிரியர் பழனி நன்றி கூறினார்.