ADDED : பிப் 16, 2025 03:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமுதாய வளபயிற்றுநர்கள் மற்றும் மகளிர் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
பி.டி.ஓ., பிரபா சங்கர் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட வட்டார மேலாளர் ரஞ்சிதா வரவேற்றார். ஒன்றிய சேர்மேன் விஜயகுமார் தலைமை தாங்கி, குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
மாவட்ட வள பயிற்றுநர் அபிராமி பாதுகாப்பு சட்டம் குறித்து பயிற்சி அளித்தார். ஏ.பி.டி.ஓ.,க்கள் பழனி, காஞ்சனா, சசிகலா, குமார், குழந்தைகள் நல மேற்பார்வையாளர்கள் செல்வி, ஜெயந்தி மற்றும் ஊர் நல அலுவலர்கள் ஜோதி, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

