ADDED : அக் 27, 2024 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கண்டாச்சிபுரம், அங்குராயநத்தம், மடவிளாகம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியை டாக்டர் சுகுமாறன் துவக்கி வைத்தார். டாக்டர் சுபா முன்னிலை வகித்தார். மருந்தாளுனர் காந்திமதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் செவிலியர்கள் ராணி, ஜெயலட்சுமி, மாலதி ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு தொழுநோய் குறித்து 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், அன்னை சமுதாயக் கல்லுாரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முகையூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் செய்திருந்தனர்.