ADDED : பிப் 13, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., கல்விக்குழுமம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் தேசிய குடற்புழு நீக்க நாள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முகாமிற்கு, இ.எஸ்., கல்விக்குழுமம் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். முதல்வர் செந்தில்முருகன் வரவேற்றார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராம், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் போஸ்கோ, கிராம சுகாதார செவிலியர் அஞ்சலை, சுகாதார ஆய்வாளர் பிரித்விராஜ் ஆகியோர், தொழுநோய் 'மைக்கோ பாக்டீரியம் லெப்ரே' என்ற நுண்ணிய கிருமிகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆலோசனை வழங்கினர்.
விழுப்புரம் ஏழுமலை தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் இ.எஸ்., கல்வியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள், துணை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
