ADDED : ஜன 09, 2026 05:46 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வா.பகண்டையில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மின்னொளியில் வாலிபால் போட்டி நடந்தது.
போட்டிக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி போட்டியினை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி வரவேற்றார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், ராஜ் , மும்மூர்த்தி, நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன்.
மாநில பொதுக்குழு ஏழுமலை, போட்டி ஒருங்கிணைப்பாளர் வாலிபால் மணி , ஊராட்சி தலைவர் சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, துணை அமைப்பாளர் புஷ்பராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் கஸ்துாரி பாண்டியன், செல்வம்.
மாவட்ட பிரதிநிதி அசோக், சுதாகர், வேல்முருகன், வெங்கடேசன், ஒன்றிய துணை செயலாளர்கள் சங்கர், ராம்குமார், கலை இலக்கிய அணி கலைச்செல்வன், அருளானந்தம் உட்பட கட்சி பலர் பங்கேற்றனர்.

