ADDED : அக் 13, 2024 07:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : புதுச்சேரியில் இருந்து பைக்கில் சாராய பாக்கெட் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம் அடுத்த சொரப்பட்டு அருகே சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த நபரை சோதனை செய்ததில், புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தைச் சேர்ந்த குமரன், 40; என்பதும் இவர், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
பிரம்மதேசம் போலீசார் வழக்கப்பதிந்து குமரனை கைது செய்து, சாராய பாக்கெட்டுகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.