/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்
/
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்
ADDED : ஜூன் 20, 2025 02:46 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, 3516 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு தின விழாவில், 1265 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 918 உறுப்பினர்களுக்கு 92.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வங்கிக் கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
2021-22ம் ஆண்டு 11 ஆயிரத்து 848 குழுக்களுக்கு 620.31 கோடி, 2022-23ம் நிதியாண்டில் 12 ஆயிரத்து 166 குழுக்களுக்கு 778.74 கோடி, 2023-24ம் ஆண்டில் 13 ஆயிரத்து 872 குழுக்களுக்கு 1057.11 கோடி, 2024-25ம் ஆண்டு 12 ஆயிரத்து 341 குழுக்களுக்கு 1060.55 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.