/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் காயம்
/
கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் காயம்
ADDED : மே 07, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அருகே கார் மோதிய விபத்தில் லாரி டிவைர் காயமடைந்தார்.
மயிலம் அடுத்த தென்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 44; லாரி டிரைவர். கடந்த 2ம் தேதி மதியம் 3:45 மணிக்கு, மயிலம் அருகே உள்ள கன்னிகாபுரத்தில் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையோரம் நின்றிருந்தார்.
அப்போது, சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஹூண்டாய் ஐ 20 கார் சிவபிரகாம் மீது மோதியது.
துாக்கி வீசப்பட்ட சிவப்பிரகாசத்திற்கு தலையில் பலத்த காயமும், கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.