தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு

 லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு

 லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : பிப் 27, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பாமாயில் லோடு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் திருச்சி - சென்னை சாலையில் போக்குவரத்து பாதித்தது.

கும்பகோணத்தில் இருந்து நேற்று விழுப்புரம் மாவட்ட கடைகளுக்கு சப்ளை செய்ய பாமாயில் பாக்கெட் லோடு ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை விருதுநகரைச் சேர்ந்த அருள்கனி மகன் அரவிந்த், 27; ஓட்டி வந்தார்.

விழுப்புரம் கடைகளுக்கு சப்ளை செய்துவிட்டு திண்டிவனம் நோக்கி சென்றபோது, காலை 7:30 மணிக்கு விக்கிரவாண்டி, பாப்பனப்பட்டு அருகே சர்வீஸ் சாலையில் சென்றபோது, கட்டப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த பாமாயில் பாக்கெட்டுகள் சிதறின. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி தப்பினர்.

கிராம மக்கள் பாமாயில் பாக்கெட்டுகளை ஒரு லிட்டர் பாக்கெட் பெட்டிகளை எடுத்துச் சென்றனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்தால் அப்பகுதியில் காலை 7.30 மணி முதல் 9:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us