/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அறுவடை நேரத்தில் பெய்த திடீர் மழையால் நஷ்டம்! செஞ்சியில் நெல் விவசாயிகளுக்கு பாதிப்பு
/
அறுவடை நேரத்தில் பெய்த திடீர் மழையால் நஷ்டம்! செஞ்சியில் நெல் விவசாயிகளுக்கு பாதிப்பு
அறுவடை நேரத்தில் பெய்த திடீர் மழையால் நஷ்டம்! செஞ்சியில் நெல் விவசாயிகளுக்கு பாதிப்பு
அறுவடை நேரத்தில் பெய்த திடீர் மழையால் நஷ்டம்! செஞ்சியில் நெல் விவசாயிகளுக்கு பாதிப்பு
ADDED : மே 22, 2024 12:30 AM
செஞ்சி: செஞ்சி பகுதியில் நெல் அறுவடை நேரத்தில் பெய்த திடீர் மழையால் நெற்பயிர்கள் மழையில் பாதிப்புக்குள்ளாகி நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
செஞ்சி மற்றும் மேல்மலையனுார் பகுதியில் நெல் சாகுபடியை ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏரி, குளங்கள் நிரம்பி இருக்கும் அப்போது சம்பா நடவு செய்கின்றனர்.
சம்பா பருவத்தில் நெல் சாகுபடி முழு அளவில் இருக்கும். சம்பா அறுவடை முடிந்ததும் மீண்டும் ஜனவரி மாதத்தில் நவரை பருவத்தில் நெல் நடடுவு செய்வார்கள். அப்போது ஏரிகளில் உள்ள நீரின் அளவிற்கு ஏற்ப சாகுபடியின் அளவு இருக்கும்.
கடந்த ஆண்டு சரியான மழை இல்லாமல் போனதால் ஏரிகளில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தது. இதனால் நவரை பருவத்தில் முழு அளவில் நெல் சாகுபடி செய்யாமல் 75 சதவீதம் அளவிற்கு சாகுபடி செய்திருந்தனர்.
நெல் பரப்பளவைக் குறைத்து நடவு செய்திருந்தும், டிசம்பர் மாதத்திற்கு பிறகு செஞ்சி பகுதியில் நான்கு மாதங்களாக ஒரு துளி மழையும் இல்லாததால் ஏரிகளில் தண்ணீர் வேகமாக குறைந்தது. கோடை வெயில் துவங்கியதும் எஞ்சி இருந்த தண்ணீரும் வேகமாக வற்றி விட்டன.
ஏரிகள் வறண்டதால் விவசாய கிணறுகளிலும் நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து அதல பாதாளத்திற்கு சென்றது.
நடவு செய்த நெல்லில் பாதியை காப்பாற்றினால் போதும் என கருதி விவசாயிகள் பாதியளவு பயிர்களை கை விட்டிருந்தனர். மீதம் இருந்த பயிர்களை பெரும் சிரமத்திற்கு இடையே காப்பாற்றி இருந்தனர்.
இந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாரக உள்ளன. கடந்த இரண்டு வாரமாக அறுவடை நடந்து வந்த நிலையில் சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையில் நெற்பயிர்கள் சிக்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் வழக்கமாக பயன் படுத்தும் நெல் அறுவடை இயந்திரங்களை பயன் படுத்த முடியாமல் சேறும் சகதியுமானது. எனவே பெல்ட் வைத்த பெரிய நெல் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்தனர்.
இதனால் அறுவடை செலவு இரண்டு மடங்கானது. அத்துடன் ஈரமான நெல் மணிகளை நிலத்தில் உலர்த்திய போது பெருமளவு நெல் மணிகள் நிலத்தில் கொட்டி விட்டன. மழையில் நனைந்ததால் வைக்கோலும் விற்க தககுதி இல்லாமல் கூலமாகி போனது. இதனால் வைக்கோல் மூலம் கிடைக்கும் வருவாயும் கிடைக்காமல் போனது.
மழையில் சிக்கிய நெற்பயிர்கள் தரம் குறைந்து போனதால் கூடுதல் விலையும் கிடைக்காது. பயிர்கள் வாடிய போது பெய்யாத மழை, அறுவடை நேரத்தில் பெய்ததால் செஞ்சி, மேல்மலையனுார் பகுதி நெல் மகசூல் பாதியானதால் விவசாயிகள் பெருந்த நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

