/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லாட்டரி சீட்டு விற்பனை: இருவர் கைது
/
லாட்டரி சீட்டு விற்பனை: இருவர் கைது
ADDED : ஏப் 14, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அருகில் உள்ள கொடிமா கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 51; திருவேங்கடம், 65; இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. திண்டிவனம் டி.எஸ்.பி. தனிபடை போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இருவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது.
மயிலம் போலீசார் இருவரையும் கைது செய்து, பைக், 3 மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.

