/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோட்டக்குப்பத்தில் குறைந்த மின்னழுத்தம் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி
/
கோட்டக்குப்பத்தில் குறைந்த மின்னழுத்தம் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி
கோட்டக்குப்பத்தில் குறைந்த மின்னழுத்தம் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி
கோட்டக்குப்பத்தில் குறைந்த மின்னழுத்தம் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி
ADDED : ஏப் 25, 2025 05:00 AM
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொது மக்கள் வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
வானுார் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் வரை கடும் மின்தடை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மின் தடைக்கு தற்காலிக தீர்வு காணும் வகையில், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து தனியாக உயர் மின்கம்பங்கள் அமைத்து, கோட்டக்குப்பம் நகராட்சி பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கோடை காலம் என்பதால் கோட்டக்குப்பம் பகுதிக்கு மின் தேவை அதிகரித்துள்ளது. கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக நாள் முழுவதும் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி மின் தடை ஏற்படுவதோடு மட்டுமில்லாமல், குறைந்த மின் அழுத்தம் காரணமாக, 'டிவி', பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக, குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏசி, பேன்களை பயன்படுத்த முடியாமல் கோடை காலங்களில் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் துாக்கத்தை தொலைத்துள்ளனர். அப்பகுதி மக்களின் நலன் கருதி, குறைந்த மின் அழுத்தத்தை சீரமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

