/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மா.கம்யூ., மாநாடு ஆயத்த கூட்டம்
/
மா.கம்யூ., மாநாடு ஆயத்த கூட்டம்
ADDED : செப் 19, 2024 11:21 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மா.கம்யூ., சார்பில், வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள 24வது மாநில மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஆயத்த கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் ஆகியோர், மாநாடு ஆயத்த பணிகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது. இப்போதைய அரசியல் முக்கியத்துவம், ஜாதி, மதவாத சக்திகளின் ஆதிக்கத்தை ஒழித்து மக்களாட்சியை ஏற்படுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் கடலுார் மாதவன், கள்ளக்குறிச்சி ஜெய்சங்கர், திருவண்ணாமலை சிவக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆனந்தன், ஏழுமலை, வீரமணி மற்றும் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு, 143 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.