ADDED : பிப் 26, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில் கஞ்சா விற்பனையை கண்டு கொள்ளாத காவல்துறையை கண்டித்து மா.கம்யூ.,சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டமங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். தமிழரசன், பன்னீர்செல்வம், ரவி, சக்கரபாணி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாநில குழு உறுப்பினர் கீதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கஞ்சா விற்பனையை கண்டுகொள்ளாத போலீசாரை கண்டித்து பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் துரை, சௌந்தரராஜன், மூர்த்தி, ஏழுமலை, தனலட்சுமி தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.
