/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரவுபதியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
/
திரவுபதியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED : பிப் 15, 2024 11:46 PM

செஞ்சி : பெருங்காப்பூர் திரவுபதியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி கடந்த 14ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. இரவு 7:30 மணிக்கு வேதபாராயணமும், 10:00 மணிக்கு சுவாமி சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், யந்திர பிரதிஷ்டையும் நடந்தது.
நேற்று காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் நடந்தது. 9:30 மணிக்கு விநாயகர், ஸ்ரீமாரியம்மன், ராதாருக்மணி வேணுகோபால சுவாமி, நவகிரகங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 10:20 மணிக்கு திரவுபதியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரம், விமான கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
சிவஸ்ரீ சிவா ஐயர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.