/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி பெரியாயி கோவிலில் மகா கும்பாபிஷேகம்
/
செஞ்சி பெரியாயி கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED : மே 01, 2025 05:14 AM

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் பெரியாண்டவர், பெரியாயி, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா கடந்த 29ம் தேதி மாலை 4:௦௦ மணிக்கு பூர்வாங்க பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ, லட்சுமி ஹோமம், கோ பூஜை, 5 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம், சாந்தி ஹோமம், விசேஷ திரவிய ஹோமம், மகா பூர்ணாஹூயும் நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு யாத்ரா தானமும், கடம் புறப்பாடும், 9.40 மணிக்கு பெரியாண்டவர், பெரியாயி, அங்காளம்மன் மற்றும் கோபுர கலசத்திற்கும் மகா கும்பாபிஷேகமும் நடந்தது. செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

