/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாலதண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேகம்
/
பாலதண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஜன 20, 2025 06:44 AM

செஞ்சி: செஞ்சி அடுத்த வரிக்கல் பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை கோ பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமான மணிசங்கல்பம், கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது.
மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரார்ப்பணம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று விடியற்காலை வேதிகார்ச்சனை, அக்னி கார்யம், இரண்டாம் கால ஹோமம், தத்வார்சனை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து, கடம் புறப்பாடாகி, 8.45 மணிக்கு கோபுர கலசங்களுக்கும், 9:00 மணிக்கு பாலதண்டாயுதபாணி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் நடந்தது.
மாலை வள்ளி, தேவசனா, சிவசுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.