/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெளிக்காட்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
/
வெளிக்காட்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 28, 2025 01:00 AM

செஞ்சி: சேதுவராயநல்லுார் வெளிக்காட்டு அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி அடுத்து சேதுவராயநல்லுார் வெளிக்காட்டு அம்மன், பாலமுருகன் கோவில் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் விழா கடந்த 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம் நடந்தது. பகல் 12 மணிக்கு விக்ரகங்கள் கரிக்கோல ஊர்வலம் நடந்தது.
மாலை 5 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையும், 6 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, விசேஷ திரவிய ஹோமமும், இரவு 8.30 மணிக்கு யந்திர பிரதிஷ்டை, அஷ்ட பந்தனம் சாற்றுதல் நடந்தது.
நேற்று காலை கோபூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மகாபூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடும், 9.45 மணிக்கு வெளிக்காட்டம்மனுக்கும், 10 மணிக்கு பாலமுருகனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகமும், அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.