sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழா :விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரயில்கள்

/

 திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழா :விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரயில்கள்

 திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழா :விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரயில்கள்

 திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழா :விழுப்புரத்தில் இருந்து 3 சிறப்பு ரயில்கள்


ADDED : பிப் 14, 2026 04:14 AM

Google News

ADDED : பிப் 14, 2026 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: திருவண்ணாமலையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் செய்திக்குறிப்பு:

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, வரும் 15 மற்றும் 16 தேதிகளில் திருவண்ணா மலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

மகா சிவராத்திரி பண்டிகையின் போது, பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை 15 மற்றும் 16 தேதிகளில் காலை 10:10 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருவண்ணாமலைக்கு முற்பகல் 11:45 மணிக்கு சென்றடையும்.

இதேபோல், திருவண்ணா மலையில் இருந்து பகல் 12:40 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2:15 மணியளவில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறது.

மேலும், விழுப்புரம் - வேலுார் இடையே முன்பதிவு செய்யப்படாத ரயில்கள் இயக்கப்படுகிறது.

விழுப்புரத்தில் இருந்து இரவு 10:55 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12:10 மணிக்கும், வேலுார் கண்டோண்ட்மென்ட் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 1:45 மணிக்கும் சென்றடைகிறது.

இதேபோல், வேலுார் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் அதிகாலை 2:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருவண்ணாமலைக்கு அதிகாலை 3:20 மணிக்கும், விழுப்புரம் ரயில்நிலையத்திற்கு அதிகாலை 5:00 மணிக்கும் சென்றடைகிறது.

மேலும் விழுப்புரத்தில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருவண்ணாமலைக்கு காலை 10:45 மணிக்கும், காட்பாடிக்கு பிற்பகல் 1:05 மணிக்கும் சென்றடைகிறது.

இதேபோல் காட்பாடியில் பிற்பகல் 1:20 மணிக்கு புறப்படும் ரயில், திருவண்ணாமலைக்கு பிற்பகல் 3:28 மணிக்கும், விழுப்புரத்திற்கு மாலை 5:10 மணிக்கும் சென்றடைகிறது.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு, பக்தர்கள் வசதிக்காக முன்பதிவு இல்லாத 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் மறுமார்க்கத்திலும் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us