/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் மகா சுதர்சன ஹோமம்
/
அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் மகா சுதர்சன ஹோமம்
அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் மகா சுதர்சன ஹோமம்
அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் மகா சுதர்சன ஹோமம்
ADDED : ஜன 25, 2024 05:28 AM

விழுப்புரம் : அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக மகா சுதர்சன ஹோமம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த அரசமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், புனர்பூச நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 4.30 மணிக்கு மங்கல இசை, சுப்ரபாததத்துடன் பூஜை துவங்கியது. காலை 7:00 மணிக்கு கோ பூஜையும், காலை 9 :00 மணிக்கு மூலவர் வரதராஜப் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது.
மூலவர் வரதராஜப் பெருமாளுக்கு புஷ்பம், துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு, தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து, உற்சவ பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள் பாலித்தார். காலை 10:00 மணிக்கு துவங்கி பிற்பகல் 12:00 மணி வரை, உலக நன்மைக்காக லட்சுமி மகா சுதர்சன ஹோமம் நடந்தது. பின் பூர்ணாஹீதியும், திருவாரதனம் சாற்று முறையும், மகா ஆரத்தியும் நடந்தது.
தொடர்ந்து மாலை 4:00 மணியிலிருந்து 5:00 மணி வரை பக்தி சொற்பொழிவும், நாதஸ்வரம் இசையும், மாலை 6:00 மணிக்கு உற்சவர் வரதராஜ பெருமாள் புஷ்பம், துளசியால் அலங்காரம் செய்யப்பட்டும், உற்சவர் வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளினர். உற்சவர் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.