/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
/
மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
ADDED : டிச 31, 2024 04:56 AM

விழுப்புரம் : சென்னை குளோபல் ஆர்கனைசேஷன் -டிவினிட்டி இந்தியா டிரஸ்ட் சார்பில், 19ம் ஆண்டு, மஹாரண்யம் முரளீதர சுவாமிஜியின் அருளுரை மற்றும் மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை, விழுப்புரத்தில் நாளை நடக்கிறது.
இந்த கூட்டு பிரார்த்தனை, நாளை ஜன.1ம் தேதி மாலை 4.30 முதல் 7.30 மணி வரை, விழுப்புரம் அருகே லட்சுமிபுரம், விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:விவேகானந்தரின் குருநாதர் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் 1886ம் ஆண்டு ஜன.1ம் தேதி, தனது பக்தர்களை அழைத்து, அவர்கள் வேண்டிய வரங்களை அருளிய புண்ணிய தினமாகும். இதனை, ஆண்டுதோறும் ஆங்கில வருடப்பிறப்பின்போது, கல்பதரு தினமாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ராமகிருஷ்ண பரமஹம்சரை போற்றும் விதத்தில், 2007ம் ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக கல்பதரு தினத்தில் பல நகரங்களில் முரளீதர சுவாமியின் கூட்டு பிரார்த்தனை நடந்து வருகிறது. இந்தாண்டு, விழுப்புரத்தில் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதற்கு கட்டணம் இல்லை. உலக அமைதிக்கு காரணமான தெய்வீகத்தை மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்வது இந்நிகழ்வின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.