/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்வி மட்டுமின்றி சமூக சேவைகளிலும் ஈடுபாடு; விருதுகளை குவிக்கும் நல்லாசிரியை மாலினிதேவி
/
கல்வி மட்டுமின்றி சமூக சேவைகளிலும் ஈடுபாடு; விருதுகளை குவிக்கும் நல்லாசிரியை மாலினிதேவி
கல்வி மட்டுமின்றி சமூக சேவைகளிலும் ஈடுபாடு; விருதுகளை குவிக்கும் நல்லாசிரியை மாலினிதேவி
கல்வி மட்டுமின்றி சமூக சேவைகளிலும் ஈடுபாடு; விருதுகளை குவிக்கும் நல்லாசிரியை மாலினிதேவி
ADDED : மே 24, 2025 09:22 PM

விழுப்புரம் அடுத்த கோலியனுார் ஒன்றியம், ஆனாங்கூர் ஊராட்சி நடுநிலை பள்ளி ஆசிரியை மாலினிதேவி. இவரது கணவர் பூபதி, விழுப்புரம் அரசு கலை கல்லுாரி வேதியியல் துறை தலைவர். மாலினிதேவி, கடந்த 2000ம் ஆண்டு மதுரப்பாக்கம், குச்சிப்பாளையம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை பணியில் சேர்ந்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவையில் உள்ள இவர், பல்வேறு சமூக சேவைகள் புரிந்து விருது மற்றும் பல்வேறு சான்றுகளுடன், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார். ஜே.ஆர்.சி., அமைப்பு மூலம் கடந்த 2004ம் ஆண்டு கலெக்டரிடம் சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருதும், 2005-06ம் ஆண்டில் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றார்.
கடந்த 2006ம் ஆண்டு சிகரம் தொட்ட ஆசிரியருக்கான விருதும், 2009ம் ஆண்டு பட்டிமன்றத்தில் விருது, ஆசிரியருக்கான கட்டுரை போட்டியில் முதல் பரிசை வென்று கேடயம், நினைவு பரிசை பெற்றுள்ளார்.
மேலும், கொரோனா காலத்தில் கல்வி சேவையை சிறப்பாக செய்ததற்காக சேவை மாமணி விருது பெற்றுள்ளார். ஆசிரியை மாலினி தேவிக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த 'சிகரம் தொட்ட ஆசிரியர் விருது' கடந்த 2016ம் ஆண்டு வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கான சமூக சேவை புரிந்ததற்காக ஜே.ஆர்.சி., மூலம் நீண்டகால சேவை விருதும், கொரோனா கால தன்னார்வ பணியை பாராட்டி, சிறந்த தன்னார்வலர் விருதும் பெற்றுள்ளார். ஜே.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளராக இருந்து, பேரிடர் இயற்கை சீற்றங்களில் பொருள் உதவியுடன், தன்னார்வ பணி, தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியதற்காக அரசின் பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளார்.
மாணவர்களின் புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்த நடமாடும் நுாலகம் மூலம் தலைவர்கள் பற்றிய புத்தகங்கள், இலக்கிய நுால்களை வழங்கி அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தியதோடு, மாணவ, மாணவிகளை அதிகளவில் போட்டிகளில் பங்கேற்கச் செய்து, பரிசு பெற்று தந்துள்ளார்.
மாணவர்களின் வருகை பதிவேடு, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உதவியுள்ளார்.
ஆசிரியை மாலினிதேவி, விழுப்புரத்தில் கல்வி சேவை மட்டுமின்றி, இலக்கிய சேவை, சமூக சேவை உள்ளிட்ட பல சேவைகளை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.