/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கேலோ இந்தியா போட்டிக்கு மல்லர் கம்ப அணி தேர்வு
/
கேலோ இந்தியா போட்டிக்கு மல்லர் கம்ப அணி தேர்வு
ADDED : ஜன 05, 2024 10:16 PM

விழுப்புரம், : விழுப்புரத்தில் கேலோ இந்தியா போட்டிக்கு, மாநில அளவிலான மல்லர் கம்ப அணி தேர்வு நடந்தது.
தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி வரும் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது. போட்டியில், தமிழகம் சார்பில் மாநில அளவிலான மல்லர் கம்ப அணி பங்கேற்கிறது. இதற்கான அணி தேர்வு நேற்று விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த தேர்வுக்கு விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், உடற்கல்வி இயக்குனர்கள் செல்வம், முருகன், ராமன், பயிற்றுனர் ஆதி, சீதாராமன், சங்கீதா, ராமச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர், மல்லர் கம்ப அணியை தேர்வு செய்தனர்.
தேர்வு போட்டியில், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கரூர், சென்னை, கடலுார், கன்னியாகுமரி, வேலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மல்லர் கம்ப வீரர், வீராங்கனைகள் 126 பேர் பங்கேற்றனர்.
இதில் 6 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் என 12 பேர் கொண்ட மாநில அளவிலான அணி தேர்வு செய்து, அனுப்பி வைக்க உள்ளதாக, தேர்வு குழுவினர் தெரிவித்தனர்.