/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலிபரிடம் தகராறு செய்தவர் கைது
/
வாலிபரிடம் தகராறு செய்தவர் கைது
ADDED : ஜூலை 29, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஆகாஷ், 20; இவர், சில தினங்களுக்கு முன் அதே பகுதி யைச் சேர்ந்த சஞ்சீவ்குமார், 23; என்பவரிடம் தகராறு செய்து, திட்டி தாக்கினார்.
இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசார் ஆகாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மு ன்தினம், சஞ்சீவ்குமாருக்கு ஆதரவாக செயல்பட்ட அப்பகுதியை சேர்ந்த ஜாகீர், 33; என்பவரை, ஆகாஷ் திட்டி, தாக்கினார்.
புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து ஆகாைஷ கைது செய்தனர்.

