ADDED : அக் 11, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : வீட்டு மனை தகராறில் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டி, ஓட்டேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் சிவகாமி, 67; இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சரவணன், 40: என்பவருக்கும் வீட்டு மனை தகராறு உள்ளது.
இதன் காரணமாக, சிவகாமி தனது வீட்டிற்கு மரத்தினால் வேலி அமைத்தார். அப்போது அங்கு சென்ற சரவணன் வேலி அமைப்பதை தடுத்து, இரும்பி கம்பியால் சிவகாமியை தாக்கினார்.
புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனர்.