ADDED : டிச 10, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அருகே பெண்ணை தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த மேல் எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சிவஞானம், 24; இவர், கடந்த 7ம் தேதி தனது வீட்டின் முன் உள்ள காலி மனையில் வீடு கட்ட வேலைகளை துவக்கினார்.
அப்போது அங்கு வந்த சிவஞானத்தின் சித்தப்பா கணேசன், 50; அவரது மகன் இளவரசன், 20; ஆகியோர் சிவஞானம் அவரது தாயார் மனோகரி, 47; ஆகியோரை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் கணேசன், இளவரசன், விஜயலட்சுமி, தேவி ஆகியோர் மீது செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து கணேசனை கைது செய்தனர்.