ADDED : ஏப் 22, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே பெண்ணை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
காணை அடுத்த கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி கோமதி, 35; அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 47; இருவருக்கும் அருகருகே நிலம் உள்ளது. கோமதியின் நிலத்தை கடந்து தான் சிவலிங்கம் செல்ல வேண்டும்.
கோமதி தனது நிலத்தில் உள்ள கிணற்றை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைத்துள்ளார். இதனால் செல்ல வழியில்லாததால் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் கோமதி தனது நிலத்தில் மாடு மேய்த்த போது, சிவலிங்கம் ஏன் தனது நிலத்து வழியாக வந்தாய் என கேட்டு, கோமதியை தாக்கி, மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து சிவலிங்கத்தை கைது செய்தனர்.