தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளியை தாக்கியவர் கைது  

 தொழிலாளியை தாக்கியவர் கைது  

 தொழிலாளியை தாக்கியவர் கைது  


ADDED : மார் 19, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடிபோதையில் தொழிலாளியை செங்கல்லால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே சோழகனுார் புதுகாலனியை சேர்ந்தவர் ஞானபிரகாசம், 60; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடை பகுதியில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, குடிபோதையில் அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த நந்தன் மகன் அய்யப்பன், 35; என்பவர், போதையில் ஞானபிரகாசத்தை எழுப்பி வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென கீழே கிடந்த செங்கல்லை எடுத்து, ஞானபிரகாசத்தின் கண்ணத்தில் கடுமையாக தாக்கியுள்ளார்.

அதில் பலத்த காயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் காணை போலீசார் அய்யப்பன் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us