/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கியவர் கைது
/
ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கியவர் கைது
ADDED : அக் 29, 2025 09:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே, சுந்தரிபாளையம் கிராமத்தில் ஒருவரின் வீட்டிற்கு பின்னால், ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கியிருப்பதாக விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதன் பேரில், குடி மைப் பொருள் வழங்கல் போலீசார், அந்த வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கு, 50 கிலோ எடையுள்ள 28 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, விழுப்புரத்தைச் சேர்ந்த புஷ்பலிங்கம், 49; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

