/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது
/
போதை மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது
ADDED : டிச 31, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : திண்டிவனத்தில் குட்கா, போதை மாத்திரைகள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் போலீசார், நேற்று மாலை ரோந்து சென்றபோது, திண்டிவனம் மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வகுமார், 24; என்பவரை பிடித்து சோதனை நடத்தினர்.
இதில் அவர் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள், போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.