ADDED : ஆக 31, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் கர்ணா 45: இவர் நேற்று முன் தினம் காலை பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 40 வயது பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்தார்.
பெண் கூச்சல் எழுப்பியதால் கர்ணா அந்த பெண்ணை தடியால் அடித்து விட்டு தப்பி சென்றார். இது குறித்து கேட்ட பெண்ணின் கணவரை கர்ணாவும், அவரது இரண்டு மகன்களும் திட்டி மிரட்டினர்.
இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து கர்ணாவை கைது செய்தனர்.

