ADDED : மே 14, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: புதுச்சேரியில் இருந்து தமிழகப்பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
கிளியனூர் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் கொந்தமூர் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற பைக்கை மடக்கி சோதனை செய்தார்.
பைக்கில் புதுச்சேரியில் இருந்து கோவடி பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்திச்செல்வது தெரியவந்தது. விசாரணையில், திண்டிவனம் அருகே உள்ள கோவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் இளங்கோ, 39; என்பதும், கோவடி கிராமத்தில், புதுச்சேரி மதுபாட்டில்களை விற்க எடுத்து சென்றதும் தெரிய வந்தது. போலீசார் இளங்கோவை கைது செய்து, 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.