ADDED : நவ 08, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்கில் மணல் கடத்திய வரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பதிவெண் இல்லாத ஸ்பிளண்டர் பைக்கில், மூட்டையில் ஆற்று மணல் கடத்தி வந்த பிடாகம் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், 34; என்ப வரை கைது செய்து, பைக் மற்றும் மணல் மூட்டையை பறிமுதல் செய்தனர்.

