/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் தபால் ஊழியரிடம் செயின் பறித்தவர் கைது
/
பெண் தபால் ஊழியரிடம் செயின் பறித்தவர் கைது
ADDED : நவ 18, 2025 07:35 AM

திண்டிவனம்: ஸ்கூட்டியில் வந்த பெண் தபால் ஊழியரிடம் செயின் பறித்த வழக்கில் தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனத்தில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த பெருவளூரைச் சேர்ந்த அம்மாவாசை மகன் தங்கவீரன், 30; என்பதும், கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தொழுப்பேடு தபால் நிலையத்தில் பணிபுரியும் பெண் போஸ்ட் மாஸ்டர் இந்துமதி, 38; என்பவரிடம் செயின் பறித்து சென்ற வழக்கில் தேடப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
அதையடுத்து தங்கவீரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

