/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூதாட்டியிடம் கவரிங் செயின் பறிப்பு தங்க நகை என ஏமாந்தவர் கைது
/
மூதாட்டியிடம் கவரிங் செயின் பறிப்பு தங்க நகை என ஏமாந்தவர் கைது
மூதாட்டியிடம் கவரிங் செயின் பறிப்பு தங்க நகை என ஏமாந்தவர் கைது
மூதாட்டியிடம் கவரிங் செயின் பறிப்பு தங்க நகை என ஏமாந்தவர் கைது
ADDED : செப் 19, 2024 11:11 PM
மயிலம்: வானுார் அருகே நடந்து சென்ற மூதாட்டியின் கவரிங் செயினை, தங்க செயின் என நினைத்து பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
அனந்தபுரம் அடுத்த வரிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தகிருஷ்ணன். இவரது மனைவி தேவகி, 75; இவர், நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு தேற்குணம் கிராமத்தில் தனது உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
கிராமத்திலிருந்து தனது பேரனை பைக்கில் வரும்படி கூறிவிட்டு சிறிது துாரம் நடந்து சென்றார்.
அப்போது அய்யனார் கோவில் அருகே எதிரே வந்த நபர் தேவகியை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த கவரிங் செயினை, தங்கச் செயின் என நினைத்து, பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிளியனுார் போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுத்து, செயினை பறித்துச் சென்ற எண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக், 35; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.