/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டாக்கத்தியைக் காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது
/
பட்டாக்கத்தியைக் காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது
ADDED : ஜூலை 14, 2025 03:39 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் பட்டாக்கத்தியுடன் வீடுபுகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி, செட்டீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி ஸ்ரீ தேவி, 42; இவர், 11ம் தேதி மதியம் 2:00 மணிக்கு கோவிலுக்கு பூஜை செய்ய அங்கிருந்த பொது பைப்பில் தண்ணீர் பிடித்தார்.
அப்போது உஸ்மான் நகரை சேர்ந்த முகம்மது ரிஸ்வான், 23: என்பவருக்கும், ஸ்ரீதேவிக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த முகம்மது ரிஸ்வான் பட்டாக்கத்தியுடன் ஸ்ரீதேவி வீட்டினுள் நுழைந்து அவரை திட்டி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். தட்டிக் கேட்ட ஸ்ரீதேவி கணவர் கதிர்வேலையும் மிரட்டினார்.
ஸ்ரீதேவி அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து முகம்மது ரிஸ்வானை கைது செய்து மிரட்டலுக்கு பயன்படுத்தி பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர்.