/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரில் அதிவேக பயணம் தட்டி கேட்டவருக்கு அடி உதை
/
காரில் அதிவேக பயணம் தட்டி கேட்டவருக்கு அடி உதை
ADDED : ஏப் 02, 2025 03:32 AM
விழுப்புரம் : காரில் அதிவேகமாக சென்றதை தட்டி கேட்ட இளைஞரை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன், 31; நேற்று சாலாமேடிலிருந்து, விழுப்புரம் நோக்கி, தனது காரில் அதிவேகமாக சென்றார்.
சாலாமேடு பகுதியை சேர்ந்த சரண்ராஜ், காரை வழிமறித்து, குடியிருப்பு பகுதியில் ஏன் அதிவேகமாக செல்கிறீர்கள் என தட்டி கேட்டுட்டார்.
ஆத்திரமடைந்த நெடுஞ்செழியன், சரண்ராஜை திட்டி தாக்கினார்.
படுகாயம் அடைந்த சரண்ராஜ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் நெடுஞ்செழியன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வகின்றனர்.

