ADDED : மார் 11, 2026 04:22 AM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே போதையில் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் செல்வகுமார், 38; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் தனது வீட்டில் போதையில் மாடிக்கு சென்றவர் அங்கிருந்து எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்திலிருந்து விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
