/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குளத்தில் தவறி விழுந்தவர் சாவு
/
குளத்தில் தவறி விழுந்தவர் சாவு
ADDED : ஜன 13, 2026 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி கூலித் தொழிலாளி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை, 35; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தனது மாட்டை தண்ணீர் குடிக்க குளத்திற்கு ஓட்டிச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி நீரில் மூழ்கி இறந்தார்.
புகாரின் பேரில், பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

