ADDED : மே 29, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
வானுார்: வானுார் அருகே கல் குவாரி குட்டையில் குளித்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.
சேலம் மாவட்டம், இருசங்காட்டு வளைவு சேலவாடல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த எறையூரில் உள்ள கிரானைட் கல்குவாரியில் கடந்த 4 நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தார்.
நேற்று, எறையூர் பகுதியில் செயல்படாத கல்குவாரி குட்டையில் இறங்கி குளித்தார். அப்போது நீரில் மூழ்கி இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வானுார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், குட்டையில் 2 மணி நேரமாக தேடி, வெங்கடேசன் உடலை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
