/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றவர் சாவு
/
கார் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றவர் சாவு
ADDED : ஜூன் 12, 2025 10:29 PM
திண்டிவனம்; திண்டிவனம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் மனைவி இறந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த கணவரும் இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பாப்பான்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத், 45; இவரது மனைவி கல்பனா, 40; இருவரும் கடந்த 6ம் தேதி மயிலம் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, ஸ்கூட்டரில் சென்னைக்கு சென்றனர்.
திண்டிவனம் - சென்னை சாலையில் மேல்பாக்கம் வந்த போது, திருச்சி நோக்கிச் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்பனா இறந்தார்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சம்பத்நேற்று காலை இறந்தார்.
ஒலக்கூர்போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.