ADDED : ஏப் 03, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பிரம்மதேசம் போலீசார், மண்டபெரும்பாக்கம் கிராமத்தில் நேற்று மாலை 3:00 மணிக்கு ரோந்து சென்றனர். அங்குள்ள பனை மரத்தில் கள் இறக்கி கொண்டிருந்த வாலிபரை, போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர், அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் கெங்கராஜ், 40; என்பது தெரியவந்தது. பின், போலீசார் விசாரணை செய்ததில், அவர் கள் விற்பனை செய்ய இறக்கியது தெரிந்தது. பின், போலீசார் வழக்குப் பதிந்து கெங்கராஜை கைது செய்ததோடு, 1.10 லிட்டர் கள் பானை மற்றும் இதற்கு பயன்படுத்தப்பட் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

