/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழிப்பறி செய்து தப்பியவர் மின்வேலியில் சிக்கி பலி
/
வழிப்பறி செய்து தப்பியவர் மின்வேலியில் சிக்கி பலி
ADDED : ஜன 23, 2025 01:23 AM

திண்டிவனம்:திண்டிவனம் அருகே வழிப்பறி செய்து, தப்பியோடியவர் காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் மகன் சூர்யா, 24. இவர் மீது பல வழக்குகள் உள்ளன. நேற்று இரவு, 11:00 மணிக்கு, பாஞ்சாலம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், 24, என்பவருடன், திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்தார்.
அப்போது, கீழ்அத்திவாக்கம் கூட்ரோடு அருகே வந்த கோழி வியாபாரியை வழிமறித்து, அவரின், 15,000 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்து இருவரும் வேகமாக தப்பினர். அவர்களை கோழி வியாபாரி மற்றும் கிராம மக்கள் விரட்டினர்.
அனந்தமங்கலம் அருகே பெட்ரோல் தீர்ந்து விட்டதால், வண்டியை போட்டுவிட்டு சூரியா, மணிகண்டன் ஆகியோர் வயல் வழியாக தப்பியோடினர்.
அதிகாலை 4:00 மணிக்கு, ஒலக்கூர் எல்லையிலுள்ள ரமேஷ் என்பவர் நிலத்தின் வழியாக ஓடினர். அங்கு, காட்டுப்பன்றி தொல்லைக்காக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கிய சூர்யா, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சூர்யா உடன் வந்த மணிகண்டனை, ஒரத்தி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.